தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும்

தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துரை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு பின் முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். 

இதனிடையே, தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

Previous Post Next Post