தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 1,596 ஆக உள்ளது


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,587 -ல் இருந்து 1,596 ஆக சற்று அதிகரித்துள்ளது. 21 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,534 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,60,195 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,596 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,28,961 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,37,48,573 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.இன்று கோவிட் உறுதியானவர்களில் 919 பேர் ஆண்கள், 677 பேர் பெண்கள்.
Previous Post Next Post