சென்னை அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை


சென்னை அண்ணா சாலையில் கருணாநிதிக்கு மீண்டும் சிலை வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் நீலமேகம் அவர்கள், அரசு சார்பாக அண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். இதன் பொருட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று, சென்னை அண்ணா சாலையில் கருணாநிதி சிலை மீண்டும் வைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் பெரியார், அண்ணாவின் சிலைகளை போல் கருணாநிதிக்கும் சிலையும் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Previous Post Next Post